இரண்டு பெண்கள் கொலை!

இரண்டு பெண்கள் கொலை!

திக்வெல்ல மற்றும் அயகம பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு திக்வெல்ல கோட்டகொட பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை மோதலாக மாறியதையடுத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 26 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர அயகம, வதுகாரகம பிரதேசத்தில் வீடொன்றினுள் 83 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net