புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தீர்மானம்!


புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தீர்மானம்!

புதிய அரசியல் யாப்பு தொடர்பான நிபுணர்கள் குழு அறிக்கை, அரசியலமைப்பு பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்பு பேரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் இது அரசியல் யாப்பின் வரைபு அல்லவெனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்பு பேரவை இன்று 10 மணியளவில் கூடவுள்ளது.

இதேவேளை புதிய அரசியல் யாப்பின் ஊடாக எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாமென அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net