பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ கீகனகேயின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டள்ளது.
தெமடகொட கனியவள கூட்டுத்தாபன தலைமையகத்தில் ஏற்பட்ட குழப்பிநிலை தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவர் இன்று கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி அப்போதைய கனியவள அமைச்சராக செயற்பட்ட அர்ஜுன ரணதுங்க கனிய வள கூட்டுத்தாபன வளாகத்திற்கு சென்றபோது ஏற்பட்ட குழப்பநிலையையடுத்து அங்கு குழப்பம் ஏற்படத்தும் வகையில் செயற்பட்ட குற்றத்திற்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகனகே கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.