ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி!

ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி!

வடமாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர் இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகாரசபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் நிலூகா ஏக்கநாயக்க அரச மரம் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய அனைத்து மாகாணங்களினது ஆளுநர்கள் தமது பதவியினை இராஜினாமா செய்திருந்தனர்.

இதனையடுத்து, அனைத்து மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வடமாகாணத்தின் புதிய ஆளுநராக சுரேன் ராகவன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், வடமாகாணத்தின் ஆளுநராக ரெஜினோல்ட் குரேவை மீண்டும் நியமிக்க வேண்டும் என வடபகுதி மக்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். இந்நிலையில், ரெஜினோல்ட் குரேவிற்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net