10 வருடங்களாக கோமாவில் இருக்கும் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது – அதிர்ச்சியில் மருத்துவமனை நிர்வாகம்!
பத்து வருடங்களாக படுத்த படுக்கையில் சுயநினைவு இல்லாமல் இருந்த பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த பத்து வருடங்களுக்கு முன் ஏரியில் மூழ்கியதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். அவருக்கு உயிர் மட்டுமே இருந்தாலும் எந்தவித உணர்வும் இன்றி கடந்த பத்து ஆண்டுகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
கோமா நிலையில் உள்ள பெண் அந்த மருத்துவமனையில் பணிபுரியும் ஆண் ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் அங்கு பணிபுரியும் ஆண்கள் அனைவருக்கும் டி.என்.ஏ சோதனை நடத்த மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.