மட்டக்களப்பு மக்களின் 10 கோடியை ஏப்பமிட்ட அமல் எம்.பி.
கம்பெரலிய திட்டத்தின் மூலம் நாட்டில் பல்வேறு பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அமல் எம்.பியால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கப்பட்ட போதும் இன்று 10 கோடி நிதி திறைசேரிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஸ்ரீநேசன், யோகேஸ்வரன் ஆகியோர் சிறந்த முறையில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வரும் நிலையில் அமல் மாத்திரம் அபிவிருத்திக்கான பணிகளை மேற்கொள்ள வில்லை என்பது பலரது கருத்தாக காணப்படுகின்றது.
கடந்த வருடத்தில் வெளிநாட்டு பயணங்களுக்காக கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தினை மட்டக்களப்பு மாவட்டத்தின் மீதும் வைத்திருந்தார் என்றால் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கலாம் என்றும் பலர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பொறுப்பு வாய்ந்த பதவியில் இருக்கும் இவர் போன்ற அரசியல் வாதிகளின் செயற்பாட்டினால் மக்களுக்கு தேவையான அபிவிருத்தி பணிகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவது இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த வருடம் திருகோணமலையின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்னசிங்கம் 2 கோடி ரூபாய் பணத்தை பயன்படுத்தாமையால் மீண்டும் அப் பணம் திருப்பி அனுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.