புலம்பெயர் நாடுகளில் வாழும் இலங்கையர்கள் தாயகம் திரும்ப முடியாதா?
வெளிநாடுகளில் வாழும் எந்தவொரு இலங்கையர்களுக்கும் எமது நாட்டில் செயற்படுவதற்கு இடமளிக்கப்படாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹோமாகம பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டை பிரித்து ஒரு இனமாக எங்களால் முன் செல்ல முடியாது. எங்களால் இன, மதங்களை வெறுக்க முடியாது. அதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இனங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டிவிட முடியாது, இதை தான் நான் நாடாளுமன்றத்திலும் கூறினேன்.
நாங்கள் அனைவரதும் அவசியத்தை புரிந்து கொண்டு ஒருவரை ஒருவர் மதித்து அரசியலமைப்பை அமைக்க வேண்டும்.
ஒரு தரப்பினை வேதனைப்படுத்தி மிதித்து சிறுபான்மை, பெறுபான்மை என வேறுபடுத்தி எங்களால் ஒரு நாடாக முன்செல்ல முடியாது. நாட்டு சமூகத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வருவோம்.
வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் இந்த நாட்டில் செயற்படுவதற்கு அனுமதிக்க முடியாதென மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.