வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு இடையில் மோதல்! ஒருவர் கொலை!
மாலைத்தீவில் இலங்கையர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Alif Dhaalu Atoll பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் பணியாற்றிய இலங்கையரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மற்றுமொரு இலங்கையருடன் ஏற்பட்ட வாய்த்தகராறு மோதலாக மாறிய நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கத்தியால் குத்தியவருக்கு எந்தவொரு ஆபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என குறப்பிடப்படுகின்றது.
இரவு 08.50 மணியவில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.