கணவனின் சடலம் மீட்பு: மனைவி கைது!
சந்தேகத்திற்கிடமான முறையில் வீட்டிலிருந்து கணவனின் சடலம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மனைவி கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
வந்தாறுமூலை, மூங்கிலடி வீதியை அண்டியுள்ள வீட்டிலிருந்து 3 பிள்ளைகளின் தந்தையான செல்வராசா கலைச்செல்வன் (வயது 35) என்பவரின் சடலம் மீட்கப்பட்டு சட்ட வைத்திய
உடற்கூறாய்வுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இது விடயமாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று சந்தேகத்தின் பேரில் மனைவியைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.