மகிழ்ச்சியுடன் தமிழர்களுக்கு வாழ்த்து தெரிவித்த இரா. சம்பந்தன்!
இலங்கையில் வாழ்கின்ற அனைத்து தமிழ் மக்களுக்கும் மகிழ்ச்சியுடன் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதேவேளை, சூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் இந்த உழவர் திருநாளில் தமது சொந்த நிலங்களில் குடியேற முடியாமல் தவிக்கும் எமது உறவுகளின் துயரங்கள் நீங்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.