15 வயதான மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை!
15 வயதுடைய தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை ஒருவர் 13 ம் திகதி செவனகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது தந்தையுடன் தனக்கு தேவையான புத்தகங்கள் வாங்குவதற்கு நகரத்திற்கு சென்று திரும்பி வந்தபோது தந்தை அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் தனது மகளை கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று துஸ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுமியின் தாயார் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ்வதாகவும் சிறுமி தனது பாட்டியுடன் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
40 வயதான சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 24 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் செவனகல பொலிஸார் தெரிவித்தனர்.