உங்களின் அனைத்து கஷ்டங்களை போக்க தேங்காய் ஒன்றே போதும்!
சமையல்களில் மட்டுமின்றி ஆன்மீகத்திலும் முக்கியப்பங்கு வகிக்கும் ஒரு பொருள் என்றால் அது தேங்காய்தான். குறிப்பாக இந்து மதத்தில் தேங்காய் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது.
வெற்றிகரமான வாழ்க்கை
ஒருவேளை நீங்கள் நீதிமன்றம் தொடர்பான வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருந்தால், வீட்டில் தேங்காயை கொண்டு ஒரு சிறிய பூஜை செய்யவும்.
அதன்பின் அந்த தேங்காய் மீது ஒரு சிவப்பு நிற பூவை வைக்கவும். நீங்கள் வெளியே செல்லும்போது அந்த பூவை உங்களுடன் எடுத்துசெல்லவும். நிச்சயம் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.
கண்திருஷ்டி
ஒருவேளை உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்காவது கண்திருஷ்டி இருந்தால் அதனை தேங்காயை கொண்டே சரிபண்ணலாம். செவ்வாய் கிழமையில் ஒரு தேங்காயை அரை மீட்டர் சிவப்பு நிற துணி கொண்டு சுற்றி கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை சுற்றி ஏழு முறை சுற்றவும். பின்னர் அந்த தேங்காயை அனுமனின் பாதத்தின் பக்கத்தில் வைத்துவிடவும்.
உங்கள் வாழ்க்கையில் அதிக தடைகளை இருப்பதை உணர்ந்தால், இரவு முழுவதும் உங்கள் முதுகிற்கு பின் புறம் ஒரு தேங்காயை வைத்துக்கொண்டு தூங்கவும். மறுநாள் காலை குளித்துவிட்டு அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு அந்த தேங்காயுடன் வேறு சில பிரசாதங்களையும் சேர்த்து பிள்ளையாருக்கு படைத்துவிடவும்.
பண நெருக்கடி
ஒருவேளை உங்களுக்கு பண நெருக்கடி இருந்தால் இதனை செய்யவும். செவ்வாய் கிழமையன்று தேங்காயை எடுத்துக்கொண்டு ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லவும். அதன்பின் தேங்காய் மீது குங்குமத்தால் ஸ்வஸ்திக் வரைந்து அதனை ஆஞ்சநேயருக்கு படைக்கவும்.
அதன்பின்னர் கோவிலில் அமர்ந்து அனுமன் மந்திரத்தை கூறி வழிபடவும். இதனை 8 வாரம் தொடர்ந்து செய்தால் எவ்வளவு பெரிய பண நெருக்கடியாக இருந்தாலும் சரியாகிவிடும்.
தொழில் நஷ்டம்
ஒருவேளை உங்களுக்கு தொழிலில் கடுமையான நஷ்டம் ஏற்பட்டால் வியாழக்கிழமையன்று அரை மீட்டர் மஞ்சள் நிற துணியில் தேங்காயை சுற்றி அதனுடன் சில மஞ்சள் நிற இனிப்புகளையும் சேர்த்து விஷ்ணு பகவானுக்கு படைத்து வழிபட்டால் விரைவில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
வாழ்க்கை பிரச்சினைகள்
உங்கள் வாழ்க்கையில் தொடர்ச்சியாக பல பிரச்சினைகள் இருந்தால் அதனை சரி செய்ய ஒரு தேங்காய், ஒரு சிவப்பு துணி, சில சிவப்பு மலர்கள் மற்றும் சில கற்பூரங்களுடன் கோவிலுக்கு சென்று துர்கை அம்மனுக்கு படைக்கவும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து செய்யவும்.
வறுமை
நீங்கள் கடுமையான வறுமையில் கஷ்டப்பட்டால் வெள்ளிக்கிழமையில் இதனை செய்ய வேண்டும். தேங்காயை கொண்டு மஹாலக்ஷ்மியை வழிபடவும், பின்னர் இந்த தேங்காயை உங்கள் லாக்கரில் வைக்கவும். உங்கள் வறுமை கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை நீங்களே உணருவீர்கள்.
சனிபகவான்
சனிபகவானால் உங்களுக்கு கஷ்டங்கள் ஏற்பட்டால் சனிகிழமைகளில் ஒரு தேங்காயை புனித நீரால் கழுவி அதனை சனிபகவானுக்கு வைத்து வழிபடவும்.
அவ்வாறு செய்யும்போது ” ஓம் ராமதூதாய நமஹ ” என்னும் இந்த மந்திரத்தை கூறவும். இதனை 7 வாரம் தொடர்ந்து செய்தால் சனிபகவான் மற்றும் ஆஞ்சநேயர் இருவரின் அருளும் உங்களுக்கு கிடைக்கும்.
கால சர்ப்ப தோஷம்
கால சர்ப்ப தோஷத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு தனிப்பட்டரீதியாகவும், அலுவலகரீதியாகவும் பல பிரச்சினைகள் ஏற்படும்.
அந்த சூழ்நிலையில் அவர்கள் ஏழைகளுக்கு உலர்ந்த தேங்காயையும், போர்வையையும் தானமாக கொடுக்க வேண்டும். இது கால சர்ப்ப தோஷத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும்.
ஏகாஷி தேங்காய்
ஒருவேளை உங்களுக்கு 3 கண் உடைய தேங்காய் கிடைத்தால் அது உங்கள் அதிர்ஷ்டம் ஆகும். இந்த தேங்காய் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த தேங்காய் ஏகாஷி தேங்காய் என்று அழைக்கப்படுகிறது.
இந்த தேங்காயை கடவுளுக்கு வைத்து வழிபடுவது சிறப்பான பலன்களை வழங்கும். இந்த தேங்காய் லக்ஷ்மி தேவியின் அவதாரம் என்று நம்பப்படுகிறது.