கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்நடைகளிற்கு பொங்கல் பொங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிளிநொச்சி மாவட்டத்தில் பண்ணைகளிலும், வீடுகளிலும் இவ்வாறு பொங்கல் பொங்கி பட்டிப்பொங்கல் சிறப்பாக இடம்பெற்றன.
கிளிநொச்சி கருணாநிலையத்தில் இன்று இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வில் கால்நடைகளிற்கு பொங்கல், பழங்கள், கரும்பு என வழங்கப்பட்டு சிறப்பு வழிபாடும் இடம்பெற்றது.
இவ்வாறு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பட்டிப்பொங்கல் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றன.