சிறைக் கைதிகளை விரட்டி விரட்டி தாக்கும் பொலிஸார்! (காணொளி இணைப்பு)
அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள சிறைக்கைதிகளை காவலர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பில் சிறைக்கைதிகளை பாதுகாக்கும் குழு இன்று இந்த காணொளியை செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டது.
அதில், வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை காவலர்கள் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
சிறைக்கைதிகள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த சம்பவம் எப்போது இடம்பெற்றது என்ற விடயம் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.