திடீரென பிரபல்யம் அடைந்து தென்னிலங்கையை கதி கலங்கும் கோத்தபாய!

சமகால அரசியலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ திடீரென பிரபல்யம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அவருடைய பிரபலத்தன்மை திடீரென அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவான பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்டு வரும் வாக்கெடுப்புகளில் கோத்தபாயவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது.
சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கோத்தபாயவுக்கு 62 வீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதில் சஜித் பிரேமதாஸவுக்கு 32 வீத வாக்குகளே கிடைத்துள்ளன.
சம்பிக்க ரணவக்கவுக்கு ஆதரவான பக்கம் ஒன்றில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு 73 வீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் சம்பிக்கவுக்கு 27 வீதம் மட்டுமே கிடைத்துள்ளது.
இதற்கு மேலதிகமாக மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான பேஸ்புக் பக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட வாக்கெடுப்பில் கோத்தபாய ராஜபக்சவுக்கு 80 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கோத்தபாயவின் திடீர் பிரபல்யம் குறித்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரிய வருகிறது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அமெரிக்காவில் பெற்ற குடியுரி்மையை கைவிடப் போவதாக கோத்தபாய அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.