பெருந்தொகையில் இலாபமீட்டிய புன்னைநீராவி கிராம அபிவிருத்திச்சங்கத்துக்கு மக்கள் பாராட்டு.
கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் ஆளுகைக்குட்பட்ட KN 57 கிராம சேவையாளர் பிரிவின் கீழ் இயங்கும் புன்னைநீராவி கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவு செய்யப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட இலாபத்தை பெற்று பல் வேறு வேலைகள் மேற் கொள்ளப்பட்டதை தொடர்ந்து மிக துரிதகதியில் செய்து முடிக்கப்பட வேண்டிய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அவசிய கலந்துரையாடல் புன்னைநீராவிஅ.த.க.பாடசாலையில் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கோகிலன் தலைமையில் 14.01.2019.திங்கட் கிழமை பிற்பகல் 04.00. மணிக்கு இடம் பெற்றது.
புன்னைநீராவி கிராம சேவையாளர் அஜித்குமார் கண்டாவளை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் அ.பிரபா புன்னைநீராவி வாழ்வின் எழுச்சி உத்தியோகத்தர் மக்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கோரிக்கை விடுத்துள்ள அனைத்து விடயங்களுக்கும் மிக துரிதச் செயற்பாட்டு நடவடிக்கை ஓரிரு மாதங்களுக்குள் செயற்படுத்தப்படும் என அதிகாரிகளால் மக்களுக்கு தெளிவு படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.