இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது!
இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கட் சபை தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி 07ம் திகதி நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி விளையாட்டுத்துறை அமைச்சரால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் அறிவித்துள்ளது.