பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பிரதி மேயருக்கு பிணை!
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மின் ஒரு பயங்கரவாத குழுவுடன் தொடர்புகளை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனை அடுத்து பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதும் அவர் ஆஜராகாத காரணத்தால் நீதிமன்றத்தினால் பிடியானை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் அவர் இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.