சுமந்திரன் ஊடகங்களை விமர்சித்தமை தொடர்பில் வை.தவநாதன் எதிர்ப்பு!
நேற்று புதன்கிழமை சுமந்திரன் ஊடகங்களை விமர்சித்தமை தொடர்பில் முன்னால் வட மாகாண சபை உறுப்பினல் வை.தவநாதன் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவிக்கையிலேயே,
நேற்று யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகங்களை சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தமை தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழரசு கட்சி இவ்வாறே யுத்த காலத்திலும் செயற்பட்டதாகவும், தொடர்ந்து தற்போதும் இவ்வாறே செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்த அவர், குறித்த நிகழ்வில் ஊடகங்களை விமர்சித்தமைக்கு தனது கண்டனத்தை தெரிவித்தார்.
தமக்கு சாதகமான கருத்துக்களை தெரிவிக்கம்போது மௌனமாக இருக்கின்றவர்கள், எதிர்மறையான கரு்ததுக்களை ஊடகங்கள் வெளிக்கொணரும்போது இவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதுள்ள அரசு வடக்கு கிழக்கில் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்கும்போது தமது கருத்து பெறப்பட வேண்டும் என தெரிவித்த சுமந்திரன், நேற்றய நிகழ்வில் அவ்வாறு தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில் இவர்கள் அரசாங்கத்தில் அமைச்ச பதவிகளை வகித்தால் மக்களின் கேள்விகளிற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக அவ்வாறு அமைச்சுக்களை பொருப்பேற்காது, அமைச்சுக்களை அடக்கி ஆளும் வகையில் செயற்படுகின்றமை வெளிச்சமாக அனைவருக்கும் தெரியும் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.