வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கணனி மயப்படுத்தல்.
வவுனியா பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் நோயாளர்கள் பதிவு செய்யும் முறைமை இன்று முதல் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது.
நோயாளர்களின் நன்மை கருதியும் அவர்களின் விபரங்களை கணனி மயப்படுத்தப்பட்டு அவர்களுக்கான சிகிச்சையளிக்கும் நடவடிக்கையுடன் மருந்து வழங்கும் நடவடிக்கை உட்பட அனைத்தும் இன்று முதல் புதிய முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இலகுவாக நோயாளர்களின் விபரங்களையும் அவர்களின் நோய்களையும் இலங்கையில் எப்பாகத்திலிருந்தும் பார்வையிட்டுக்கொள்ளக்கூடிய வகையில் இப் புதிய தொழிநுட்ப முறைமை பயன்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டு நோயாளர்களின் விபரங்கள் சேகரிக்க வசதி ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று முதல் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை மேற்கொள்ள வருபவர்களுக்கு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் வழங்கப்படும் கணனி சிட்டையை கொண்டுவரும் பட்சத்தில் வைத்தியர்கள் இலகுவாக கிசிச்சையினை மேற்கொள்ள முடியும் என்று வைத்தியசாலைத்தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இனிவரும் காலங்களில் வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்கள் சிரமமின்றி தமது நடவடிக்கையினை மேற்கொள்ளமுடியும்.