அம்பாறையில் இராணுவத்தினர் வசமிருந்த காணி விடுவிப்பு
அம்பாறையிலுள்ள மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.எ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று காலை விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க ஆளுநரை வரவேற்றதுடன் தொடர்ந்து கச்சேரியின் எ.ஜ.விக்ரம அரங்கில் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
அங்கு இராணுவத்தினரின் வசமிருந்த காணி விடுவிப்புச் செய்யப்பட்ட பத்திரங்கள் ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அவை அரசாங்க அதிபரிடம் ஆளுநரால் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஆளுநரினால் உரையாற்றப்பட்டதுடன் அதன்பின்பு ஊடகவியலாளர்களின் சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
நிகழ்வில் அரச அதிபர் பண்டாரநாயக்க, இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் ஆளுநரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன உட்பட பலரும் கலந்து கொண்டனர்.