எதிர்க்கட்சி தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த!

சற்று முன்னர்  எதிர்க்கட்சி தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்ற மஹிந்த!

புதிய எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ச சற்று முன் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற மத வழிபாடுகளை தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக அவர் கடமைகளை பொற்றுப்பேற்றுள்ளார்.

இதேவேளை, புதிய எதிர்க்கட்சி தலைவர் நியமனம் பல்வேறு விமர்சனங்கள் தோன்றியிருந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து மஹிந்த ராஜபக்ச இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று ஜனாதிபதியாக இரு தடவைகளை பதவி வகித்த மஹிந்த பிரதமராகவும் செயலாற்றியுள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net