எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர்!

எம்.ஜி.ஆர். ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர்!

ஈழத்தமிழர்களின் உரிமை போராட்டத்திற்கு குரல் கொடுப்பதில், மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைசிறந்த தலைவராக விளங்கியதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இலங்கையில் 83 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலையை கண்டித்து மிகப்பெரும் கடையடைப்பை முன்னெடுத்து வெற்றிக்கண்டவர் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் நேற்று (வியாழக்கிழமை) யாழில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“மறைந்த எம்.ஜி.ஆர், வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்ட எங்களுடைய தலைவர்கள் தங்கதுரை மற்றும் குட்டிமணி ஆகியோரது குடும்பங்களுக்கு, அப்போதைய பிரதமராகவிருந்த மறைந்த இந்திராகாந்தியின் பணிப்புரைக்கு அமைய, தமிழக அரசின் செலவில் தொடர்மாடி வீடுகளை அமைத்துக்கொடுத்தவர்.

அதுமட்டுமல்லாது தனது சொந்த பணத்தினை விடுதலை இயக்கங்களுக்கு அள்ளிக்கொடுத்தவர். தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அன்புக்கு பாத்திரமானவர்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net