கிளிநொச்சி பொது சந்தையில் இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம்!
கிளிநொச்சி பொது சந்தையில் நேற்று வியாழக்கிழமை இரவு தீ பரவியுள்ளது. லட்ச கணக்கில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று இரவு 9.45 மணியளவில் குறித்த பொது சந்தை கட்டட தொகுதி ஒன்றில் தீ பரவ ஆரம்பித்தது. தீ பரவுவதை அவதானித்தவர்களால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்த நேரத்தில் தீயணைப்பு பிரிவினரும் அங்கு வருகை தந்து இணைந்து முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பொது சந்தையில் அமைந்துள்ள பழக்கடை ஒன்றிலேயே இவ்வாறு தீ பரவியது. தொடர்ந்து ஏனைய பகுதிகளிற்கும் பரவ முற்பட்ட வேளையிலேயே பொதுமக்கள் மற்றம் தீயணைப்பு பிரிவினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதன்போது பழக்கடை ஒன்று முற்றாக தீயினால் சேதமடைந்ததுடன், ஏனைய கடைகள் சிலவற்றில் சிறிய அளவில் தீ பரவியிருந்தது.
இதன்போது குறித்த பழக்கடைக்கு சுமார் 2 லட்சம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீ பரவியமை தொடர்பிலான விசாரணைகளை கிளநொச்சி பொலிசார் முன்னெடுக்க உள்ளனர்.