கொலம்பிய கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு!
கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இடம்பெற்ற பாரிய கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 9 பேர் உயிரிழந்தனர்.
நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பில் 54 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
ஜெனரல் சன்டென்டர் பொலிஸ் கல்லூரியை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று கல்லூரியின் சுவரில் மோதி வெடிக்க வைக்கப்பட்ட நிலையில் அங்கு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் பயிலுனர்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்தில் காரை இயக்கிய சாரதியும் சம்பவ இடத்திலேயே பலியானதாகவும், குறித்த நபர் ஜோஸ் அல்டேமார் ரோஜாஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அந்த சாரதி சாம்பல் நிற நிஸான் ரக கார் ஒன்றை செலுத்தி வந்ததாகவும் அதில் 80 கிலோகிராம் உயர் தாக்கம் மிக்க பென்டோலைட் வெடிப் பொருட்கள் இருந்தாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.