சுமந்திரன் எம்.பிக்கு யாழ்ப்பாணத்தில் கடும் எதிர்ப்பு!
வடமராட்சி கிழக்கு பருத்தித்துறையில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுடைய புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட பதாகை மீது வர்ணம் பூசப்பட்டு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டு அப்பகுதி மக்களால் நேற்று எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை பருத்தித்துறை பகுதியில் சுமந்திரனுக்கு வரவேற்று நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
அன்றைய தினத்தில் பருத்தித்துறை நீதிமன்ற வீதி மற்றும் ஆலய புணரமைப்பு செய்யப்பட்மை தொடர்பான “கம்பெரிலிய அபிவிருத்தி யுத்தம்” என்னும் திட்டத்தின் பதாகை திரைநீக்கம் செய்யப்பட்டது.
இதில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எம்.பி சுமந்திரனுடைய புகைப்படங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
குறித்த பதாகையில் உள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருடைய புகைப்படங்கள் மீது எந்தவிதமான வர்ணங்களும் பூசப்படவில்லை.
எனினும் சுமந்திரனுக்கு எதிர்பினை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்தப் பதாகைகள் மீது வர்ணங்கள் பூசப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.