செயற்கை உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
செயற்கையான முறையில் உயிர்க்கலத்தை உருவாக்கி விஞ்ஞானிகள் புதிய சாதனைப் படைத்துள்ளனர்.
Technical University of Munich (TUM) இல் பணியாற்றும் Friedrich Simmel மற்றும் Aurore Dupin ஆகிய விஞ்ஞானிகள் இணைந்து செயற்கையான முறையில் உயிர்க்கலத்தினை உருவாக்கியுள்ளனர்.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கலங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பாடலை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் கலங்கள் கொழுப்பு இழையத்தினால் வேறுபடுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கலங்கள் சிறிய இரசாயன சமிக்ஞை மூலம் அதிகளவு சிக்கல்தன்மை வாய்ந்த விளைவை ஏற்படுத்தக்கூடியன. அதாவது RNA உட்பட ஏனைய சில வகை புரதங்களை உற்பத்தி செய்யக்கூடியதாக இருக்கின்றன.