முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!

முல்லைத்தீவில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாய் பலி!

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு, கரும்புள்ளியான் பகுதியில் மின்சாரம் தாக்கி ஐந்து பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மனியளவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – மாந்தை கிழக்கு பிரதேசத்துக்குட்பட்ட கரும்புள்ளியான் கிராமத்தில் வாய்க்காலிலிருந்து நீர் இறைக்கும் மோட்டர் மூலம் நீர் இரைத்துக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட மின்னொழுக்கு காரணமாக அதில் சிக்கி குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தின் போது கரும்புள்ளியான் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய மணிவண்ணன் சுமதி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் சடலம் தற்போது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net