வவுனியாவில் புதிதாக முளைத்த மதுபானசாலைக்கு நகரபிதா கடும் கண்டனம்!

வவுனியாவில் புதிதாக முளைத்த மதுபானசாலைக்கு நகரபிதா கடும் கண்டனம் : அகற்றுவதற்கு தீர்மானம்!

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலையை அகற்றுவதற்கு நகரசபையில் தீர்மானம் எடுக்கப்பட்டதுடன் நகரபிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று காலை வவுனியா நகரசபையின் சபை மண்டபத்தில் இடம்பெற்ற சபை கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் பரதலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில் குறித்த மதுபானசாலை அக்கற்றுவது தொடர்பாக கூறினார்.

இதன்பொழுது நகரபிதா இ.கெளதமன் அவர்கள் குறித்த மதுபானசாலையை அகற்றுவதற்கு சபை நிச்சயமாக ஓர் தீர்மானம் கொண்டுவரவேண்டும் என்பதுடன் குறித்த மதுபான சாலை அமைந்துள்ள கட்டிடத்தில் மதுபானசாலைக்கு மேல் உள்ள பகுதியில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றுக்கும் குறித்த கட்டிட உரிமையாளர் வாடகைக்கு கொடுத்துள்ளார்.

இந்த செயற்பாடானது மிகவும் வேதனைக்குறிய விடயம் என்பதுடன் எமது சமூகத்தை சீரழிக்கும் செயல்பாடாகவே தெரிகிறது இதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நகரபிதா அவர்கள் தெரிவித்துள்ளார்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net