வவுனியா நகரசபையினர் சட்டவிரோதத்திற்கு ஆதரவா..?
வவுனியா நகரசபையில் இன்று இடம்பெற்ற அவை கூட்டத்தில் வவுனியாவில் MGR சிலை வைப்பது தொடர்பாக விவாதம் இடம்பெற்றது
இவ்விவாதத்தின் முடிவில் சிலை வைப்பதற்கு அனுமதி அளிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இவ்விடயமானது முழுதுமாக குறிப்பிட்ட சில நபர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்கமைய நகரசபையை வழி நடத்துகின்றனரா என்ற கேள்வி எழுகின்றது..?
MGR நற்பணி மன்றத்தின் உபதலைவர் நகரசபை உறுப்பினராக அங்கம் வகித்துக்கொண்டு வவுனியா நகரில் உள்ள அடிப்படை தேவைகள் அல்லது குறைகளுக்கு குரல் கொடுக்காத இவர் சபையில் MGR சிலைக்காக கடும் விவாதங்களை முன்வைத்திருந்தமை பலரும் பல விசனங்களை தெரிவித்து வருகின்றதுடன் இவர் நகரசபை உறுப்பினர் என்ற பதவியை மறந்து தான் MGR நற்பணி மன்றத்தின் உபதலைவர் என்ற ரீதியில் விவாதித்தமையும் அதனை ஏற்றுக்கொண்டு சபை உறுப்பினர்களும் தலைவரும் கேட்டுக்கொண்டிருந்தமை வேதனை அளிப்பதாகவே தெரிகிறதுடன் சிறந்த ஆளுமை உள்ள சபை என கருதமுடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சிலை அமைப்பதற்கு அனுமதி இன்றி இரவோடு இரவாக குழி தோன்றியதற்கோ அல்லது அத்திவாரம் போடுவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டதற்கு குறித்த நபர்கள் மீது நகரசபை என்ன நடவடிக்கை எடுத்து என்பது கேள்விக்குறியாக உள்ளது எனவே வவுனியாவில் யார் வேண்டும் என்றாலும் நகரசபை அனுமதி இல்லாமல் ஏதும் செய்யலாம் நகரசபை அதனை தட்டி கேட்காது என்ற நிலைக்கு மக்களை சிந்திக்க வைக்கும் நிலைக்கு இவ்விடயம் கொண்டுவந்துள்ளது.
மேலும் குறித்த சிலை வைப்பதற்கு தெரிவு செய்யப்பட்ட நிலப்பரப்பு வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் உள்ளதால் அவர்களின் அனுமதி பெறாது தீர்மானத்தை கொண்டு வந்தமை எந்த அடிப்படையில் சரியாகும் எனவும் பலரும் கேள்விகளை எழுப்புவதுடன் உயரிய சபையான நகரசபையில் உள்ளூராட்சி தேர்தலின் போதும் தேர்தலின் பின்பும் வாய் வீரம் கதைத்த உறுப்பினர்கள் இன்றுவரை குறித்த சிலை வைக்க முற்பட்ட பகுதியில் அமைந்துள்ள சட்ட விரோத கடைகள் தொடர்பாக எந்தவித கேள்வியோ அல்லது ஆட்சேபனையோ தெரிவிக்காமல் இருந்தமை எமது நகரத்தில் சட்ட விரோதமாக யாரும் ஏதும் செய்யலாம் என்பதை நகரசபையினர் அனுமதி அளிக்கின்றனரா..? என்றும் அல்லது குறித்த சட்ட விரோத கடைகளிடம் இவர்கள் ஏதும் கைமாறு பெற்றுள்ளனரா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகிறது.
இதேவேளை நகரசபை உறுப்பினர் லரீப் அவர்கள் குறித்த பகுதியில் ஈழத்திற்காக போராடிய முதன் முதல் போராளிகளான குட்டிமணி, தங்கத்துரைக்கு அல்லது வன்னியில் மக்களுக்கு பல விதமாக பல நண்மைகளை செய்த பாராளுமன்ற உறுப்பினர் வசந்தன் அவர்கட்கு அதேபோல நூர்தீன் மசூர் அவர்கட்கு சிலை வைக்கலாமே என கருத்து தெரிவித்த பொழுது அதற்கு குரல் கொடுக்க வேண்டிய ரெலோவின் உறுப்பினர் லக்சனா அவர்கள் வெளிநடப்பு செய்திருந்தமையும் அதேபோல புளொட் அமைப்பின் உறுப்பினர்களான சந்திரமோகன் மற்றும் காண்டீபன் அவர்களும் ஆதரவாக கருத்து தெரிவிக்காமல் மெளனம் காத்தமை அந்த அமைப்பு சார்ந்தோரின் மத்தியில் பல விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது .
ஏதுவாக இருப்பினும் குறித்த பகுதியில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றிய பின் அப்பகுதியில் சிலைவைக்கலாம் என பொதுமக்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதுடன் குறித்த கடைகளை அகற்றுவதற்கு எதிராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பின்புலத்தில் இருப்பதனால் அவருக்கு அஞ்சி அல்லது அவருடன் வியாபார அடிப்படையில் பலர் உறவை பேணுவதாலும் முகம் முறிக்க முடியாமல் அவருக்கு அடிபணிந்து சில உறுப்பினர்கள் உள்ளார்களா எனவும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதேவேளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதி பெறாமல் சிலை வைக்க முனைந்தாலோ அனுமதி பெற்று வைக்க முனைந்தாலோ நீதிமன்றினூடாக தடை உத்தரவை பெறுவதற்கும் சில சமூக நலன் விரும்பிகள் முடிவெடுத்துள்ளனர் எனவும் அறியமுடிகிறதுடன் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் சிலை வைப்பதற்கு எதிராகவே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது