விடுதலை போராட்டத்திற்கு உரமூட்டியவர் எம்.ஜி.ஆர்!

விடுதலை போராட்டத்திற்கு உரமூட்டியவர் எம்.ஜி.ஆர்!

ஈழத்தமிழர்களின் விடுதலை போராட்டத்திற்கு உரமூட்ட, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பல்வேறு கோணங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பாசையூர் பகுதியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102ஆவது பிறந்தநாள் நினைவுதினம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“கண்டியில் பிறந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமசந்திரன் இந்தியாவிற்கு சென்று சினிமாவில் கால்பதித்ததோடு அரசியலிலும் கால்பதித்து வெற்றிக்கண்டார்.

அரசியலில் மாற்றத்தை எற்படுத்தி, திராவிட முன்னேற்ற கழகத்தை அரசியல் நிலைக்கு ஏற்றிய ஜாம்பவான் என்ற பெருமை அவரையே சாறும்.

அதுமட்டுமல்லாது, தனது திரைப்படங்களினூடாக எவ்வாறு வாழ வேண்டுமென்பதை வாழ்ந்துக்காட்டியவர்“ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net