கரைச்சி பிரதேசசபையின் அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள்.
கரைச்சி பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் அடையாளப்படுத்தப்பட்ட அபிவிருத்தி பணிகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது 21 வட்டாரங்களை உள்ளடக்கிய கரைச்சி பிரதேசசபை முதற்கட்டமாக வட்டாரத்துக்கு ஒரு பெட்டிக்கல் வெட்டு வீதம் 21 பெட்டிப்பாலங்களுக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொன்றும் 0.6 மில்லியனுக்கு குறையாத வகையில் மொத்தமாக 03 மில்லியன் ரூபாய்களில் 49 பெட்டிப்பாலங்கள் அமைப்பதற்கான நிதி பாதீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு அக்கராயன், உதயநகர் மற்றும் கிருஷ்ணபுரம் , செல்வாநகர், திருநகர் உருத்திரபுரம், ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வுகளில் தவிசாளர் அ.வேழமாலிகிதன், உப தவிசாளர் மற்றும் வட்டார உறுப்பினர்கள், கிராமிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.