சர்ச்சைக்குரிய வகையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!
ஜனாதிபதி சட்டத்தரணிகள் 25 பேரும் சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல் அமைப்பில் இல்லாத ஓர் சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியல் சாசனத்தின் 33 (சீ.சீ) சரத்தின் அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி சட்டத்தரணிகளை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், 19ஆம் திருத்த சட்டத்தின் ஊடாக இந்த சரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம் தொடர்பில் 33 (2) (ஈ) சரத்தில் விதந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால், ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமிக்கப்பட்ட விதம் தொடர்பில் சட்ட ரீதியாக கேள்வி எழுப்ப முடியும் என சட்ட வல்லுனர்கள் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளனர்.