ஜா-எலயில் ரயில் விபத்து : இருவர் பலி, ஒருவர் படுகாயம்!

ஜா-எலயில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்து ஜா-எல – துடல்ல பகுதியிலுள்ள ரயில் கடவையில் இன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது விபத்து நிகழ்ந்துள்ளது.
குறித்த விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.