ரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும்!

ரணிலும் மைத்திரியுமே பொறுப்பு கூற வேண்டும்!

2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

எனினும் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட வேண்டும். ஊழல்வாதிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பதே அவர்களின் பொதுவான கோரிக்கையாகக் காணப்பட்டது.

எனினும் எமது அரசாங்கத்தினால் அதனை செய்ய முடியாமல் போனது. இதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுமே பொறுப்பு கூற வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த நான்கு ஆண்டுகளில் ஊழல் நடைபெற்றிருப்பதாக ஜனாதிபதி கருதினால் அது தொடர்பிலான நடவடிக்கைகளுக்கு நாமும் ஆதரவளிக்க தயாராகவுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net