வவுனியா சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் உயிரிழப்பு!
வவுனியா சிறைச்சாலை கைதி ஒருவர் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை உயிரிழந்துள்ளார்.
ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கொழும்பு, மருதானையை சேர்ந்த 41 வயதுடைய கேசவன் சசிகுமார் என்ற கைதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வவுனியா வைத்தியசாலைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டு வருவதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படுமென வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.