ஊடக அமைப்புகள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஊடக அமைப்புகள் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஊடகங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் சுதந்திரமாக உலாவுகின்றனர். அவர்கள் இன்னும் தண்டிக்கப்படவில்லை.

எனவே, நீதியை நிலைநாட்டுமாறுகோரி பொலிஸ் ஆணைகுழுவிடம் முறைப்பாடு செய்வதற்கு இலங்கையிலுள்ள ஊடக அமைப்புகள் தீர்மானித்துள்ளன.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன.

ஊடகவியலாளர்களுக்கு எதிராக அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்பது அவர் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

எனினும், நல்லாட்சி அரசாங்கமானது, எந்தவொரு குற்றவாளிக்கும் இன்னும் தண்டனை வழங்கவில்லை.

மாறாக குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயற்படுவதையே காணக்கூடியதாகவுள்ளது.எனவே, நீதியை நிலைநாட்டுமாறுகோரி ஜனவரி மாதம் 29ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.

அத்துடன், அதே தினம் 10.30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பிலுள்ள கிளை அலுவலகத்தில் இது தொடர்பில் ‘ஒன்லைன்’ மூலம் கையொப்பம் திரட்டப்பட்ட மனுவொன்றும் கையளிக்கப்படவுள்ளது என்று ஊடக அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net