கிழக்கு மாகாணத்திற்கு வரவுள்ள மேலும் சில அதிநவீன அம்புலன்ஸ்கள்!
மத்திய சுகாதார அமைச்சினால் ஒரு தொகுதி அதிநவீன அம்புலன்ஸ் வண்டிகள் நேற்று நாட்டிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன.
இதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாண வைத்தியசாலைக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும் என சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், கிழக்கு மாகாணத்தில் அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படாத ஏனைய வைத்தியசாலைகளுக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நிந்தவூரில் கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.