மன்னாரில் உடும்பைக் இறைச்சியாக்க முற்பட்டவருக்கு 20,000 ரூபா அபராதம்!
காட்டில் பிடிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கொன்று இறைச்சியாக்க கையில் எடுத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவர் உடும்பு ஒன்றைப் பிடித்து அதைக் கொன்று இறைச்சியாக்குவதற்காக கையில் எடுத்துச் சென்றபோது ரோந்து சென்ற பொலிசாரால் கைப்பற்றப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர் கடந்த வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டார்.
விசாரணைகளில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அவருக்கு இருபது ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.