மன்.குருவில் கிராம வீதியை சீரமைக்க கோரிக்கை!
மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட வட்டக்கண்டல் குருவில் கிராமம் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டது அன்றிலிருந்து மிகவும் பின்தங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தும் ஒரு கிலோ மீற்றர் நீளம் உள்ள முதன்மை வீதி சீரமைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்ப்படுகிறது தேர்தல் காலத்தில் வந்து குவியும் அரசியல் வாதிகள் கிராமத்தில் எந்த விதமான உதவிகளையும் செய்யவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.
கடந்த வருடம் நிதிப்பற்றாக்குறையால் பல வீதிகள் சீரமைக்கப்படாமல் இருந்தது இந்த வருடம் பல வீதிகள் சீரமைக்கப்பட உள்ளது.
எனவே கிராமங்களில் உள்ள சீரமைக்கப்பட வேண்டிய வீதிகள் தொடர்பான கோரிக்கைகளை பிரதேச சபையில் உடன் சமர்ப்பிக்குமாறு மாந்தைமேற்கு பிரதேச சபை தவிசாளர் செல்லத்தம்பு சந்தியோகு தெரிவித்துள்ளார்.