யாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் RPG குண்டுகள் மீட்பு!

யாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் RPG குண்டுகள் மீட்பு!

யாழ். மயிலிட்டி பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆர்.பி.ஜி (RPG) குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

நேற்று(19) மாலை கிணறு ஒன்றைத் துப்பரவாக்கிய போது, வெடி பொருள் இருப்பதை உரிமையாளர் அவதானித்துள்ளார்.

யாழ். மயிலிட்டியில் கிணறு ஒன்றில் RPG குண்டுகள் மீட்பு-RPG Bomb Found in a Abandoned Well at Mailiddi Jaffna

இதனையடுத்து, உரிமையாளர் மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு அறிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழுவினர், கிணற்றிலிருந்து மூன்று மோட்டார் குண்டுகளை மீட்டுள்ளனர்.

இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதியிலேயே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net