இலங்கையை அச்சுறுத்தும் படைப்புழுவின் பின்னணியில் அரசாங்கத்தின் சதியா?

இலங்கையை அச்சுறுத்தும் படைப்புழுவின் பின்னணியில் அரசாங்கத்தின் சதியா?

அண்மைக்காலமாக இலங்கையில் விவசாயத்துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள சேனா எனும் படைப்புழுவின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சேனா படைப்புழு பரவல் என்பது சமகால அரசாங்கத்தின் இரகசிய திட்டம் உன சந்தேகிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறான இரகசிய வேலைத்திட்டம் மூலம் விவசாயத்தை அழிப்பதற்கு அரசாங்கம் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்தை அழித்து விட்டு, உணவுகள் அனைத்தையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

படைப்புழுவின் தாக்கம் குறித்து அமைதியாக இருப்பதன் மூலம் இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சேனா எனப்படும் படைப்புழுவின் தாக்கம் காரணமாக நாடு பூராகவும் விவசாய உற்பத்திகள் பாதிப்படைந்துள்ளது.

சோளத்தை இலக்கு வைத்து தாக்குல் நடத்தும் சேனா புழு தற்போது மரக்கறி உற்பத்திகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net