கூட்டமைப்பினர் ஒன்றும் ஆயுத குழு கிடையாது!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்லவென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அவர்கள் இந்த நாட்டில் ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிகள் எனவும் அவர்கள் வடக்கு மக்களின் அபிமானத்தை பெற்ற கட்சியாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாட்டினை வினவிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,
“தமிழ் தேசிய கூட்டமைப்பு நேர்மையான வழியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.
உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பினை அரசாங்கம் பயன்படுத்துகிறது.
எனினும், கூட்டு எதிர்கட்சியினர் தமிழ் தேசியக் கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை இருப்பதாக கட்டுக்கதை கூறி ஆட்சியை வீழ்த்த முயற்சித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டு நாட்டுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
பௌத்த பிக்குகளுடன் இடம்பெற்ற அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தொடர்ந்தும் பேசிய அவர்,
“அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் புதிய அரசியலமைப்பு என்பவற்றைக் கொண்டுவருவதன் மூலம் மாத்திரம் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை.
1968ஆம் ஆண்டின் பின்னர் வட மாகாண பிரதான அரசியல் பிரவேசத்தில் உள்ளவர்கள் எவரும் அமைச்சர்களாக இருக்கவில்லை. இந்நிலையில், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளையாற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.