போதைப்பொருள் சார்ந்த குற்றங்களை அறிவிக்க விசேட இலக்கம்.
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் குறித்து தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்திய 1984 என்ற கட்டணமற்ற தொலைபேசி எண் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு பாடசாலை வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயம் செய்துள்ளார்.
அங்கு பல விசேட நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில், குறித்த இலக்கம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
போதைப்பொருளற்ற நாட்டை உருவாக்கும் ஜனாதிபதியின் எண்ணக்கருவின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.