வவுனியாவில் தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரம் பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இன்று காலை ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்ட தேசிய போதை பொருள் தடுப்பு வாரம் ஜனவரி 21 இன்று முதல் 28 வரை பிரகடனப்படுத்தப்பட்டு பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு எதிராக உறுதி மொழியினை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் இன்றைய ஆரம்ப தின நிகழ்வுகள் பாடசாலை அதிபர் ரி.அமிர்தலிங்கம் தலைமையில் பாடசாலையின் காலைப்பிரார்த்தனையின்போது பொலிசார், இராணுவத்தினரின் துண்டுப்பிரசுர விநியோகம் மற்றும் ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட போதை ஒழிப்பு எதிர்ப்பு பிரகடன அறிக்கை என்பன மாணவர்கள் மத்தியில் உரையாற்றப்பட்டதுடன் ஆசிரியர்கள், மாணவர்களின் போதை ஒழிப்பு தொடர்பான கருத்துரைகளும் இடம்பெற்றுள்ளதுடன் இன்று ஆரம்பமான போதை ஒழிப்பு வாரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையும் பாடசாலையில் தினமும் ஒவ்வொரு நிகழ்வுகளாக இடம்பெறவுள்ளதாகம் ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு போதைப் பொருள் தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்ற தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு வருவதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்துள்ளார்.
பிரதி அதிபர், உப அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், இராணுவத்தினர், பொலிஸார் எனப்பலரும் கலந்துகொண்டனர்.