வீதியோரத்தில் அநாதரவாக கிடந்த சிசுவொன்றை மீட்டெடுத்து சிகிச்சை.
வீதியோரத்தில் அநாதரவாக கிடந்த இரண்டரை மாத சிசுவொன்றை மீட்டெடுத்து சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் விரைந்து சிசுவை மீட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சிசுவை நேற்று இரவு 9 மணிக்கும் 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வீதியில் போட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டிருந்த குறித்த சிசு அழகாக உடை அணிவிக்கப்பட்ட நிலையில் போடப்பட்டிருந்ததாகவும், சிசு தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.