உலகில் பிரபலமான நட்சத்திரங்களில் 20 வயதான இலங்கை தமிழர்!

உலகில் பிரபலமான நட்சத்திரங்களில் 20 வயதான இலங்கை தமிழர்!

உலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக இலங்கை தமிழரான இளைஞனும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இலங்கை பெற்றோருக்கு நோர்வேயின் ஒஸ்லோ நகரில் பிறந்த ஜீனு மகாதேவன் என்ற இளைஞரே ஆடை அலங்கார துறையில் பிரபல நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

20 வயதான அவர், லண்டன், பாரிஸ், மிலான் மற்றும் நியூயோர்க் உட்பட உலகில் புகழ்பெற்ற ஆடை அலங்கார கண்காட்சிகளில் முக்கியமான பிரபலமாக திகழ்ந்து வருகிறார்.

அவரது உடல் நிறமே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது. மாநிறமான மகாதேவன், ஆடை அலங்கார உலகில், தெற்காசியாவை சேர்ந்த நட்சத்திரங்களில் ஒருவராக மாறியுள்ளார்.

தனது உடல் நிறம் குறித்து தான் பெருமை கொண்டாலும் ஆசியாவை சேர்ந்த பலர் இன்னும் வெள்ளை நிற தோலை எதிர்பார்ப்பதாக மகாதேவன் கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net