தென்னிலங்கையில் அரசாங்கத்திற்கு சொந்தமான பல் அங்காடியில் கொள்வனவு செய்யப்பட்ட உணவுப்பொருள் மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் இருந்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோப் சிற்றியில் கொள்வனவு செய்யப்பட்ட சீஸ்களில் புழு முட்டை நிறைந்து காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்காக பயன்படுத்தும் இந்த உணவுப் பொதியில் புழு முட்டைகள் இருந்த தென்னிலங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதனை கொள்வனவு செய்தவர் துறைசார் அதிகாரிகள் பலரிடம் முறைப்பாடு செய்த போதும் அதற்கு எந்தவித பலனும் கிடைக்கவில்லை.
குறித்த சீஸ் பெட்டி, காலாதியாகுவதற்கு நாட்கள் உள்ள போதிலும் புழுக்களுடன் காணப்பட்டது எவ்வாறு? என பாதிக்கப்பட்டவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த புழு முட்டைகளுடன் உள்ள சீஸ் காணொளியை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார்.