சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை பரிந்துரைக்கப்படல் வேண்டும்!

சர்வதேச நீதிமன்றுக்கு இலங்கை பரிந்துரைக்கப்படல் வேண்டும்! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையால், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகள் மீறல் உறுதிப்படுத்தும் வகையிலும் உறுதிமொழி வழங்கியமைக்கு அமைவான மனித உரிமைகள் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கு வழங்கப்பட்ட இரண்டு வருடகால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதம் 19 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து மிகவும் முக்கியமான தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எடுக்கப்பட உள்ள நிலையில்

இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் இது தொடர்பான பாராளுமன்ற விவாதம் ஒன்றை பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒழுங்கு செய்யுமாறும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகின்றது

அந்த வகையில் கடந்த 18ம் திகதி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள் தொகையான கொடூரங்கள் மற்றும் இனவழிப்புக்கெதிரான அமைச்சர் திரு பத்மநாபன் மணிவண்ணனின் வழிப்படுத்தலில் நுஜிதன் இராசேந்திரம் மற்றும் பொன்ராசா புவலோஜன் ஒழுங்கமைப்பில் துசியந்தன் பாலசுந்தரம், அசாந்தான் தியாகரசா, சயந்தன் குலசந்திரதாசன்,சயந்தசர்மா ஆகியோர் அமைந்துள்ள Mitcham and Morden தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான Siobhain McDonagh அவர்களையும் Crawley தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Henry Smith அவர்களையும் Lewisham தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Vicky Foxcroft அவர்களையும் Folkestone and Hythe தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் Damian Noel Thomas Collins அவர்களையும் சந்தித்து உரையாடியிருந்தனர்.

இலங்கையில் யுத்த காலத்தின் போது புரியப்பட்ட போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் 2015 செப்டம்பரில் 30/1 என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதில் கூறப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால வழங்கியபோதும் வழங்கப்பட்ட காலத்திற்குள் வாக்குறுதியளித்த விடயங்களை முழுமையாக நிறைவேற்ற தவறிவிட்டமையால் 2017 மார்ச் இல் 34/1 என்ற தீர்மானத்தின் மூலம் இலங்கை அரசிற்கு மேலும் வருட கால அவகாசம் வழங்கப்பட்டதுடன் பொறுப்பு கூறல், நீதி வழங்கல் தொடர்பில் இலங்கை மற்றும் பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணையாளர்களை உள்ளடக்கிய ஒரு கலப்பின நீதிமன்றத்தை ( Hybrid Court)
உள்நாட்டில் உருவாக்க தவறிவிட்டதுடன் சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் தொடர்ச்சியாக ஏமாற்றி வருகின்றமை குறித்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் 34/1 என்ற தீர்மானத்தினை வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவேற்ற தவறும் பட்சத்தில்
ஐ.நா மனித உரிமைச்சபையில் ஆரம்பிக்க இருக்கின்ற கூட்டத் தொடரில் இலங்கையின் செயலின்மை காரணமாக ஐ.நா மனித உரிமை மன்றம் இலங்கையை ஐ.நா பொதுப் பேரவையின் பார்வைக்கு அனுப்பி, பொதுப் பேரவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்புமாறு ஐ.நா பாதுகாப்பு மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டுமென பிரித்தானிய அரசாங்கத்திடம் அழுத்தம் கொடுக்குமாறும் இக்கோரிக்கைக்கு ஆதரவு வழங்குமாறும் சந்திப்புக்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

இலங்கையிலுள்ள பிரச்சனைகளை தொடர்ச்சியாக கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்க்கு கொண்டு வழங்கப்பட்ட மனுவினை ஏற்று தாம் அதனை ஆதரிப்பதாகவும் உறுதி அளித்ததுடன் Siobhain McDonagh அவர்களால் வரும் வாரத்தில் இலங்கைக்கு எதிரான சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவது குறித்து பாராளுமன்ற விவாதம் (Early day motion)ஒன்று ஏற்பாடு செய்வதற்குரிய உத்தரவாதம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Copyright © 2873 Mukadu · All rights reserved · designed by Speed IT net