சேனபடைபுழு தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு நட்டஈடு!

சேனபடைபுழு தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு நட்டஈடு!

சேனபடைபுழு தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் அண்மைக்காலமாக சேனபடைபுழுவின் தாக்கத்தால் விவசாய பயிர்ச்செய்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்கம் ஏனைய பகுதிகளுக்கும் பரவக்கூடியதென கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் இத்தாக்கத்திற்குள்ளான பயிர்களை தீயிட்டு அழித்துவிடுமாறு ஏற்கனவே விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. அத்தோடு அதற்கான நட்டஈடு வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net